புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்குக் கணுக்காலுக்குக் கீழ் ஜவ்வு சேதமடைந்துள்ளதால் நடக்கும்போது தொடர்ச்சியாக வலி ஏற்பட்டுள்ளது. அதற்கு மருத்துவர்கள் கொடுத்த வலி நிவாரணங்களும் பயனளிக்காத காரணத்தினால், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, நேற்று முன்தினம் இரவு சென்னை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,"முதலமைச்சர் நாராயணசாமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன் இருக்கிறார். அலுவலக கோப்புகளை அங்கிருந்து கவனித்து வருகிறார். இன்னும் ஓரிரு நாட்களில் புதுவைக்குத் திரும்பிவிடுவார். தற்போது, மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளதால், யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம்” என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'மறக்க முடியாத துயர்' - மும்பைத் தாக்குதலின் 11ஆவது நினைவு தினம்...!