புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது முதலமைச்சர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இது தொடர்பாக ஆளுநர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது, பொதுவாக என் மீதும் ஆளுநர் அலுவலகம் மீதும் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆச்சர்யம் ஏதுமில்லை. குற்றச்சாட்டுகளில் சொற்கள் மட்டுமே அடிக்கடி மாறுகிறது.
நிதி விவகாரத்தில் விதிகளை மீறி செயல்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெற்றபின்னரும் பாதிப்பைத் தருகிறது. என்னைப்போல் நியமிக்கப்பட்டவர்கள் எளிதான வழி முறைகளை கடைப்பிடிக்கவும் குறுகிய நலன்களுக்காகவும் இங்கு இல்லை. சரியான செயல் முறைக்கும், கட்டுப்பாட்டுடன் நடப்பதுடன் மட்டுமின்றி வெளிப்படையாக செயல்படுவதுதான் நன்மை தரும் என்றார்.
இதையும் படிங்க: ஒவ்வொருவர் தலையிலும் 57,000 ரூபாய் கடன் - டி.டி.வி. தினகரன்