நாடு முழுவதும் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மே17ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் கரோனா வைரஸின் பரவல் குறைந்தளவில் உள்ளதால் அம்மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மக்கள் அதிகளவில் பொது இடங்களில் குவிந்துவருவதால், வைரஸ் தொற்று பரவும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடைகளை திறக்க கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கடற்கரை சாலையில் உள்ள தலைமை செயலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு முதலமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார், அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கமலக்கண்ணன், தலைமை செயலர் அஸ்வின் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், புதுச்சேரியில் மக்கள் சமூக விதிகளை மீறி கடைகளில் திரள்வது, கடைகளை திறப்பது தொடர்பாக மாற்றம் கொண்டு வரலாம் எந்த பகுதிகளில் கடைகளைத் திறக்கலாம் எந்தவிதமான கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இதையும் பார்க்க: தமிழ்நாட்டில் ஏழாம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு!