ETV Bharat / bharat

புதுச்சேரியில் நூற்றாண்டு பள்ளிகளை புதுப்பிக்க 15 கோடி ஒதுக்கீடு! - puducherry scholl renovation

புதுச்சேரி: நூற்றாண்டு பழமை வாய்ந்த பள்ளிகளை புதுப்பிக்க பதினைந்தரை கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சரின் நாடாளுமன்ற செயலர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.

scholl
author img

By

Published : Jul 12, 2019, 7:50 AM IST

நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த கலவை கல்லூரி, வஉசி உள்ளிட்ட பள்ளிகளின் கட்டடங்கள் சேதம் அடைந்ததால் அவை மூடப்பட்டன. மேலும், அங்குப் பயின்ற மாணவர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதனிடையே, அங்கு பயின்ற முன்னாள் மாணவர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் அந்தப் பள்ளிகளைத் திறக்க வலியுறுத்திவருகின்றனர்.

தொடர்ந்து, கலவை கல்லூரி, வஉசி, கடற்கரை சாலையில் உள்ள பழமை வாய்ந்த ப்ரோன்சேனாள் உள்ளிட்ட பள்ளிகள் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என அப்பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் அரசுக்குக் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், முதலமைச்சரின் நாடாளுமன்ற செயலருமான லட்சுமி நாராயணனிடம் கேட்டபோது,

"இப்பள்ளிகளைப் புனரமைக்கவும், பள்ளிகளின் ஒரு பகுதியை இடித்துவிட்டு மீண்டும் பழமை மாறாமல் கட்டுவதற்கு சீர்மிகு நகர் திட்ட நிதியிலிருந்து பதினைந்தரை கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த கல்வியாண்டு முதல் இந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.

Intro:புதுச்சேரி நூற்றாண்டு பழமை வாய்ந்த மூடப்பட்டுள்ள பள்ளிகளை 15 அரை கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வரின் பாராளுமன்ற செயலர் தெரிவித்துள்ளார்

Body: பிரெஞ்சு இந்தியா ஆட்சி காலத்தில் புதுச்சேரி நகரப்பகுதியில் மிஷின் வீதியிலுள்ள கலவை கல்லூரி வேலூரை பூர்விகமாக கொண்ட கலவை சுப்பராயலு ரெட்டியார் இங்கு பள்ளி ஒன்றை கட்டினார் அந்த காலத்தில் இந்த பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்கள் மதிய உணவு வழங்கப்பட்டது இந்த பள்ளி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அறிஞர்கள் அமைச்சர்களை உருவாக்கிய பெருமைக்குரியது பிரெஞ்சு இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு நடத்த முதல் மாணவர்கள் போராட்டம் இங்குதான் தொடங்கப்பட்டது அதைப்போல் அதே வீதியிலுள்ள வ உ சி பள்ளியில் பயின்ற மாணவர்களின் பங்கும் விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்டனர்

மேலும் தமிழ்நாடு புதுவை இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் கலவை கல்லூரி மாணவர்களின் பங்கு மிகப்பெரியது இவ்வாறு நூற்றாண்டுகள் பழம் பெருமைகளை கொண்ட கலவை பள்ளி கட்டிடங்கள் சேதம் அடைந்ததால் மூடப்பட்டுள்ள நிலையில் மேலும் இந்த பள்ளியில் பயின்ற மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர் இதற்கிடையே அங்கு பயின்ற முன்னாள் மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் அந்த பள்ளிகளை திறக்க வலியுறுத்தி போராடி வருகின்றனர் எனவே கலவை கல்லூரி பள்ளி மற்றும் வஉ சி பள்ளி மற்றும் கடற்கரை சாலையில் உள்ள பழமை வாய்ந்த ப்ரோன்சேனாள் உள்ளிட்ட பள்ளிகள் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என அப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதற்கிடையே இந்த ஆண்டு கலவை கல்லூரி பள்ளியில் பிளஸ் 1 சேர்க்கை நிகழ்வு கல்வியாண்டில் நிறுத்தப்பட்டுள்ளது அங்கு மீண்டும் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்

இந்நிலையில் இது தொடர்பாக தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முதல்வரின் பாராளுமன்ற செயலாளருமான லட்சுமி நாராயணனிடம் கேட்டபோது

இப்பள்ளிகளை புனரமைக்க மற்றும் பள்ளியை ஒரு பகுதியை இடித்து விட்டு மீண்டும் பழமை மாறாமல் கட்டுவதற்கு ஸ்மார்ட் சிட்டி நிதியிலிருந்து 15 அரைக் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் பழமை வாய்ந்த கலவை கல்லூரி மற்றும் வ உ சி பள்ளி மற்றும் ப்ரோன்சேனாள் பள்ளிகள் ஆகிய மூன்று பள்ளிகளும் புணரமைக்கப்பட்டு அடுத்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வரின் பாராளுமன்ற செயலர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார்

Conclusion:நூற்றாண்டு பழமை வாய்ந்த மூடப்பட்டுள்ள பள்ளிகளை 15 அரை கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வரின் பாராளுமன்ற செயலர் தெரிவித்துள்ளார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.