ETV Bharat / bharat

புதுச்சேரி பட்ஜெட் விவகாரம்: ஆளுநருக்கு முதலமைச்சர் கடிதம்! - Puducherry Chief Minister Narayanasamy

புதுச்சேரி: இன்று நடைபெறவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் உரையாற்ற வருமாறு துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் ஆளுநர்
முதல்வர் ஆளுநர்
author img

By

Published : Jul 20, 2020, 3:46 PM IST

மக்களவைத் தேர்தல் காரணமாக புதுச்சேரியில் கடந்த முறை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஜூன் மாதத்துடன் இடைக்கால பட்ஜெட் நிறைவுபெறுவதை முன்னிட்டு முழு பட்ஜெட் தாக்கல் செய்ய புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கான கோப்பினை துணைநிலை ஆளுநருக்கு அனுப்பியும் வைத்தது. ஆனால், ஆளுநர் 20 நாள்களுக்கு மேலாக காலதாமதபடுத்தியதாக ஆளுங்கட்சி தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்பாக மத்திய அரசு புதுச்சேரி அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய அனுமதியளித்தது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநரின் உரையும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆளுநர் உரை தயாரித்து நேற்று மாலை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது.

ஆனால், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ”நான் உரையைப் படித்துப் பார்ப்பதற்கு கால அவகாசம் தேவை. ஆண்டு வரவுசெலவு அறிக்கையை எனக்கு தாக்கல் செய்ய வேண்டும். மேலும் துறை ரீதியாக செலவீன விவரங்களை அளிக்க வேண்டும். போதிய காலம் இல்லாததால் பட்ஜெட்டை வேறு ஒரு நாள் நடத்தலாம்” எனக் கூறி முதலமைச்சருக்கு கடிதம் அளித்தார். மேலும் இந்தக் கடிதத்தை யாரும் பெறவில்லை என்பதால், மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பதாக கிரண்பேடி அறிக்கையாக வெளியிட்டுக் கூறினார்.

இதனையடுத்து முதலமைச்சர் நாராயணசாமி அவசர ஆலோசனைக் கூட்டத்தை சட்டப்பேரவை வளாகத்தில் நடத்தினார். இதில் சபாநாயகர், அமைச்சர்கள், காங்கிரஸ், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அதில் திட்டமிட்டபடி இன்று (20.07.20) நண்பகல் 12 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கிடையில் கிரண்பேடிக்கு நாராயணசாமி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ”நேற்று (19.07.20) இரவு 11 மணி வரை முதலமைச்சர் அலுவலகத்திற்கு எந்தக் கடிதமும் தாங்கள் அனுப்பவில்லை. ஆளுநரின் அனுமதி பெற்ற பிறகே 2020-21ஆம் ஆண்டு அறிக்கை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி அனுமதி பெறப்பட்டது. இவை அனைத்தும் யூனியன் பிரதேச விதிகளுக்கு உட்பட்டு நடக்கிறது.

மேலும், கரோனா காலமாக பல நெருக்கடிகளைச் சந்திக்கும் இந்த நேரத்தில், ஏற்கனவே பட்ஜெட்டை தாக்கல் செய்ய 20 நாள்கள் காலதாமதமாகிவிட்டது. இதனால் யூனியன் பிரதேச விதிகளின்படி தாங்கள் உரையாற்ற வருவீர்கள் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: கரோனா , ஜிடிபி, சீன விவகாரம்... மோடியின் பொய் பட்டியல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.