புதுச்சேரி மாநில பாஜக நிர்வாகிகள் கூட்டம் ஏ.எஃப்.டி. மைதானத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத் தலைவர் சாமிநாதன் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் கார்த்திகேயன், "பிரதமர் நரேந்திர மோடியை கொலைசெய்ய தயார் எனவும், அதற்கு 5 கோடி ரூபாய் வேண்டும் எனவும் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர் மீது விரைந்து நடவடிக்கை எடுத்ததற்கு காவல் துறைக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தொடர்ந்து இதுபோன்று மேலும் பல பதிவுகள் சமூக வலைதளங்களில் உள்ளதால் அவற்றை உடனடியாக நீக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்ந்து இதுபோன்று அவதூறு பரப்புபவர்கள் மீதும், கலவரத்தைத் தூண்டும் வகையில் பதிவுகள் இடுவோர் மீதும் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கிரண் பேடிக்கு எதிராக நடந்த போராட்டம்: முடித்து வைத்த முதலமைச்சர்!