புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் யூனியம் பிரதேச தலைவர் சாமிநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ”புதுச்சேரியில் எமர்ஜென்சி வந்தது போல புத்தாண்டையொட்டி நகர் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் அவசர தேவைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பின்னர் புதுச்சேரியில் கரோனா தீவிரமடைந்தால், கரோனாவை பரப்பியதற்காக முதலமைச்சர் நாராயணசாமி மீது பாஜக சார்பில் வழக்கு தொடரப்படும்” என எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் இல்லா புதுச்சேரி என்ற முழக்கத்துடன் மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி பங்கேற்கும் பொதுக்கூட்டம் ஜனவரி 3ஆம் தேதி நடைபெறவிருப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க:குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவுபடுத்தி பேசியதாக விவசாயிகள் தலைவர் மீது வழக்குப்பதிவு!