வங்கி ஊழியர்கள், அலுவலர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக 2017ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் ஐபிஏ உடன் இருதரப்பு ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியுற்றது. இதனால், ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்றக் கோரி அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய 9 சங்கங்களின் கூட்டமைப்பு பிஎஃப் பி யூ இரண்டு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போரட்டம் நடத்தப் போவதாக தெரிவித்திருந்தது.
அந்த வகையில், இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி மாநில வங்கி ஊழியர்கள் யூ எஃப் பி யு கூட்டமைப்பு சார்பில் தலைமையில் யூகோ வங்கி வளாகத்தில் ஊழியர்கள், அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், அனைத்து வங்கி ஊழியர்கள், அலுவலர்கள், ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த போரட்டத்தில் 3000 வங்கி ஊழியர்கள் ஈடுபட்டதால் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் கோரிக்கைகளை நிறைவேற்ற ஐபிஏ காலம் தாழ்த்தி வருவதாக வங்கி ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: