புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். நிதிச் சிக்கல், மத்திய அரசின் நிதி காலத்தோடு கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை. அதற்குப் பதிலாக நான்கு அல்லது ஐந்து மாத செலவினங்களுக்கு சட்டப்பேரவையில் முன் அனுமதி பெறப்பட்டு வருகிறது.
அரசு ஊழியர்கள் ஊதியம், துறைவாரியாக நிதி ஒதுக்கீடு, மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த நிதி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு சட்டப்பேரவை கூட்டி செலவினங்களுக்கு பேரவையில் ஒப்புதல் பெற வேண்டியது அவசியமாகும். இந்தியா முழுவதும் கரானா பாதிப்பால் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்'- ஒடிசா சட்டப்பேரவை அலுவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவு!