ETV Bharat / bharat

சென்னையை போல புதுச்சேரி ஆகிவிடும் - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

கரோனா பாதிப்பில் புதுச்சேரி வெகு விரைவில் சென்னையை போல மாறிவிடும் என புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

author img

By

Published : Jun 20, 2020, 8:33 PM IST

சென்னையில் நாளுக்குநாள் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்நிலையில் கரோனாவின் தாக்கத்தைக் குறைக்க புதுச்சேரி எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. சென்னை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு புதுச்சேரியில் அனுமதி அளிக்கக் கூடாது என அரசு அறிவித்துடன், அதை நடைமுறைப்படுத்தியுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பேசிய காணொலி

இந்த நிலையில் புதுச்சேரி- கடலூர் முள்ளோடை பகுதிக்கு சென்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (ஜூன் 20) ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவ்வழியே சென்ற பொதுமக்களிடம் மைக் மூலமாக பேசிய அமைச்சர், “புதுச்சேரியில் ஒரு நாளுக்கு 30 பேர் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். நமக்கு அருகாமையிலுள்ள எல்லையில் இருப்பவர்கள் ஆபத்து என புரிந்துகொள்ளாமல் பயணம் செய்கின்றனர். இதன் பிறகு கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைப்பது கடினமாகிவிட்டது. கடந்த ஒருமாதமாக கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை. இப்படியே இருந்தால் புதுச்சேரி சென்னையை போல ஆகிவிடும். முக்கிய மருத்துவக் காரணமாக இருந்தால் மட்டும் அண்டை மாநிலத்திலிருந்து வரலாம்” என்றார்.

இதைப் போல மக்களிடையே நாள்தோறும் பேசுமாறு காவல்துறையினரை அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: 'கரோனாவை ஒருங்கிணைந்த முயற்சியால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.