சிறுநீரக செயலிழப்பு காரணமாக ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராமநாதன் இன்று உயிரிழந்தார். புதுச்சேரி குருவி நத்தம் தொகுதியிலிருந்து (1985-1990,1990-91) திமுக சார்பில் இரு முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், பின்னர் மதிமுகவில் மாநில செயலாளராக பொறுப்பு வகித்தார்.
அதன் பிறகு அரசியலிலிருந்து ஓய்வுபெற்றார். தற்போது உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது மகன் ராதாகிருஷ்ணன் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினராவார்.
இதையும் படிங்க: அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டம்!