காலாப்பட்டில் அமைந்துள்ளது புதுச்சேரி பல்கலைக்கழகம். இங்கு சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இன்று நிர்வாக மற்றும் துணை வேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தங்களுக்கான கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றும், எந்த வித புதிய கட்டணத்தையும் விதிக்கக்கூடாது எனவும் துணைவேந்தரை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட கட்டணங்களைக் குறைக்க வேண்டி கடந்த ஆண்டு முதல் போராடி வருவதாகவும், ஆனால் இதுவரை கட்டணம் குறைக்கப்படவில்லை எனவும் பல்கலைக்கழக மாணவர்கள் குற்றம் சாட்டினர். தற்போது மீண்டும் பேருந்துக் கட்டணத்தை உயர்த்த பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளதாகவும், அதை உயர்த்தக்கூடாது என்பது மட்டுமல்லாமல், தற்போதுள்ள மாணவர்களின் கட்டணத்தைக் குறைக்கவும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த முற்றுகை போராட்டத்தில் மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: 'புத்தகம் இல்லாமல் ஆசிரியர்கள் பாடம் நடத்த தயாரா?' - நாராயணசாமி கேள்வி