புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கும், சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும் பருவத்தேர்வுகள் இன்று தொடங்கி வரும் 29ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது. இத்தேர்வை ஆன்லைன் மூலமும் கல்லூரிக்கு வந்தும் எழுதலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து, இன்று காலை 90க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரிக்கு நேரில் வந்து தேர்வெழுதினர். முன்னதாக மாணவர்களுக்கு உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு கிருமி நாசினியால் கைகளை கழுவிய பின் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டார்கள். மேலும், வகுப்பறைகளில் தகுந்த இடைவெளியுடன் தேர்வை மாணவர்கள் எழுதினர்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் ஒரு ஹெக்டேர் விவசாய நிலம்கூட பாதிக்கப்படவில்லை'