தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாட்டு கோயில்களில் உள்ள யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் 48 நாள்கள் புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது. தேக்கடியில் யானைகள் புத்துணர்வு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இந்த முகாமில் பங்கேற்க கடந்த மாதம் புறப்பட்டு சென்ற புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி, லாரி மூலம் மேட்டுப்பாளையம் யானைகள் புத்துணர்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் முகாமில் பங்கேற்று புத்துணர்ச்சி பெற்ற யானை லட்சுமி கோவையிலிருந்து லாரி மூலம், இன்று அதிகாலை புதுச்சேரி வந்தது. யனையை மணக்குள விநாயகர் ஆலய நிர்வாகத்தினர் பூஜை செய்து வரவேற்றனர்.
புதுச்சேரி கடற்கரை சாலை தலைமைச் செயலகம் அருகே, யானை வந்திறங்கியதை கடற்கரைச் சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.
இதையும் படிங்க: யானை நல்வாழ்வு முகாம் நிறைவு!