இது பற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ” புதுச்சேரி முழுவதும் சுமார் 16 லட்சம் மக்களுக்கும் மேலாக, அதாவது 4 லட்சத்து 500 குடும்பங்களுக்கு வீடு வீடாக கரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் மதுக்கடை திறக்கப்பட்டு வரும் நிலையில், புதுச்சேரியில் மதுக்கடை திறக்கப்படவில்லை என்றால் இங்குள்ளவர்கள் அண்டை மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்படும்.
தமிழ்நாட்டிலிருந்து புதுச்சேரிக்கு வருவதற்கு சிறிய, பெரிய என 82 வழிகள் உள்ளன. அதனை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தவர் புதுச்சேரிக்குள் வருவதை தடுக்கவும், மக்கள் நடமாட்டத்தை கண்டறியவும் 125 ட்ரோன் கேமராக்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், கோயம்பேட்டிலிருந்து புதுச்சேரிக்கு காய்கறி ஏற்றி வந்தவர்கள், வியாபாரிகள் என 157 பேருக்கு கரோனா தொற்று இல்லை. தற்போதைய நிலையில் மாநிலத்தில் 3 பேர் மட்டுமே தொற்றால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் “ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஊரடங்கு விதியில் அலட்சியம்: முதலமைச்சர் எச்சரிக்கை!