கரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. மேலும், கடற்கரை சாலையில் காலை 5 மணி முதல் 9 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இரவு நேரங்களில் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அருண் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ புதுச்சேரியில் இரவு நேரங்களில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்று முதல் திரும்பப்பெறப்படுகிறது. கடற்கரை சாலையில் விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளது. மேலும், மதுபானக்கடைகள், உணவகங்கள், திரையரங்குகள், தொழிற்சாலைகள் வழக்கம் போல் அரசு அனுமதித்துள்ள நேரத்தில் இயங்கலாம் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் கரோனா பாதிப்பு 89 லட்சத்தைத் தாண்டியது