இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒளிப்பதிவில், ”வெளிநாட்டிலிருந்தும், வெளிமாநிலத்திலிருந்தும் வந்தவர்களால் தான் புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. புதுச்சேரி சிவப்பு மண்டலமாக மாறவில்லை. வெளிநாடுகளில் இருந்து எத்தனை பேர் வருகின்றனர் என்ற விவரத்தை மத்திய அரசும், சென்னையில் விமானம் மூலம் வந்திறங்கும் விவரத்தை தமிழ்நாடு அரசும் தராதது, மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழ்நாடு அரசுக்கும், சென்னை விமான நிலையத்திற்கும் கடிதம் அனுப்பியிருக்கிறேன்.
தமிழ்நாடு விலைக்கே புதுச்சேரியிலும் மது விற்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார். அதனை மறுபரிசீலனை செய்யக் கோரியுள்ளோம். இன்னும் இந்த பிரச்னை தீராத நிலையில், அரசு இதில் முடிவெடுத்து, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்பட அனைத்து இடங்களிலும் மதுக்கடைகள் விரைவில் திறக்கப்படும்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் என்மீது தனிப்பட்ட முறையில் கூறிய குற்றச்சாட்டுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர். இதுபோன்று உள்நோக்கத்தோடு, புதுச்சேரி மாநிலத்துக்கு வரும் வருவாயை தடுப்பது மட்டுமின்றி, வேண்டுமென்றே என் மீதும், புதுச்சேரி அரசின் மீதும் கலங்கம் ஏற்படுத்த ஒரு சிலர் முயற்சித்து வருகின்றனர். நீதிமன்ற உத்தரவு வந்த பிறகு, என் மீது ஆதாரமற்ற புகார்கள் கூறியவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் ” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சோனியா காந்தி மீது மேலும் ஒரு எஃப்.ஐ.ஆர்