புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "புதுச்சேரி மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை 85 விழுக்காடு மக்கள் மட்டுமே கடைபிடிப்பதாகவும், மீதமுள்ள 15 விழுக்காடு மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கைவில்லை என வேதனை தெரிவித்தார்.
அனைவரும் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டுமென வலியுறுத்தி அவர், புதுச்சேரியில் அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பவர்களின் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் பொதுமக்கள் கடைகளுக்கு கூட்டமாக செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
![புதுச்சேரி செய்திகள் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை pudhucherry news pudhucherry cm news](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6567387_pondy.jpg)
வங்கி கடனுக்கான தவணை மூன்று மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டது அனைத்து தரப்பினருக்கும் மிகுந்த பயன் அளிக்கும் எனத் தெரிவித்த அவர், புதுச்சேரியில் விவசாயிகளுக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும் என்றும் விவசாயம் செய்ய தடை ஏதும் இல்லையெனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியில் மருத்துவத் துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத் துறை, ஊடகத்தினர் மற்றும் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவரும் முகக் கவம் அணிய வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: தனிமையை கடைபிடியுங்கள் கரோனா காணாமல் போகும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்