சமீபத்தில் கோவையில் உள்ள பெரியார் சிலைக்கு சில விஷமிகள் காவி சாயம் பூசினர். இந்தச் செயலுக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த செயல் அடங்குவதற்குள் புதுச்சேரியில் இதுபோன்று வேறு ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அதாவது புதுச்சேரி வில்லியனூர் புற வழிச் சாலை சந்திப்பில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் காவி துண்டை அணிவித்து பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளனர்.
இதையறிந்த அதிமுகவினர் சம்பவ இடத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதற்கிடையில், வில்லியனூர் காவல் துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு அணிவித்த சம்பவம் வில்லியனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திட்டமிட்டு முடக்கப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை - விவசாயிகள் குற்றச்சாட்டு