ETV Bharat / bharat

புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 163ஆக உயர்வு! - புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர்

புதுச்சேரி : கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 163ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார்
சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார்
author img

By

Published : Jun 12, 2020, 4:34 PM IST

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார் இன்று (12-06-2020) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”புதுச்சேரியைச் சேர்ந்த ஆறு பேர், காரைக்காலை சேர்ந்த 14 வயது சிறுமி உள்ளிட்ட ஏழு பேர் புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

புதுச்சேரி முதலியர்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட 82 வயது முதியவர், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் முன்னதாக அனுமதிக்கப்பட்டார். பின்னர், அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

முதியவர் இறந்த பின் நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. மத்திய அரசின் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 163 பேராக உயர்ந்துள்ளது.

சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 77ஆக உள்ளது” என மோகன் குமார் தெரிவித்தார்.

இதையும் படிங்க : முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்த நாம் தமிழர் கட்சியினர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.