1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போரில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26 ஆம் தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலையில் நடைபெற்ற கார்கில் வெற்றி தின விழாவில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் கார்கில் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இந்த நினைவு விழாவில் சபாநாயகர் சிவக்கொழுந்து, தலைமை செயலாளர் அஸ்வனி குமார், டி.ஜி.பி. சுந்தரி நந்தா, காவல்துறை, ராணுவ அலுவலர்கள், முன்னாள் ராணுவத்தினர் கலந்துகொண்டு கார்கில் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.