ETV Bharat / bharat

புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் 65 பேருக்கு கரோனா தொற்று

புதுச்சேரி: நேற்று ஒரே நாளில் 65 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து புதுச்சேரியில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1009ஆக அதிகரித்துள்ளது.

மல்லாடி கிருஷ்ணராவ்  புதுச்சேரி அமைச்சர்  புதுச்சேரி கரோனா பாதிப்பு  pudhucherry corona positive case  malladi krishna rao  malladi krishna rao video corona detail
புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் 65 பேருக்கு கரோனா தொற்று
author img

By

Published : Jul 6, 2020, 2:42 PM IST

புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் 65 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரி மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் வெளியிட்டுள்ள வீடியோவில், "நேற்றைய தினம் 502 பேருக்கு கரோனா சோதனை நடத்தியதில், புதுச்சேரியில் 62 பேர், மாகி, ஏனாம், காரைக்கால் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் என 65 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தொற்று பாதித்தவர்களில், 59 பேர் கதிர்காமம் அரசு மருத்துவமனையிலும், 3 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மல்லாடி கிருஷ்ணராவ்

தற்போது, கதிர்காமம் மருத்துவமனையில் 328 பேர், ஜிப்மரில் 122 பேர், கோவிட் பராமரிப்பு மையத்தில் 31 பேர் உள்ளிட்ட 483 பேர் புதுச்சேரியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுதவிர காரைக்காலில் 9 பேர், ஏனாமில் 14 பேர், மாகியில் 9 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1009ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 480 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 14 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்" என குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: முதலில் ஸ்பானிஷ் ஃப்ளூ, பிறகு கரோனா - இரு பெரும் தொற்றுகளை வீழ்த்திய 106 வயது சாதனை மனிதர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.