ETV Bharat / bharat

'மருத்துவப்படிப்பிற்கான 10% உள்ஒதுக்கீட்டுக்கு சட்டப்போராட்டம் நடத்துவோம்' - புதுச்சேரி முதலமைச்சர்

அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்பிற்கான 10 விழுக்காடு உள் ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய உள் துறை அமைச்சரை நேரில் சந்தித்து விளக்கமளிக்கவும், உள்ஒதுக்கீட்டுக்கான சட்டப் போராட்டம் நடத்தவும் முடிவெடுத்துள்ளதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

10 percent quota for govt school student
'மருத்துவப்படிப்பிற்கான 10 விழுக்காடு உள்ஒதுக்கீட்டுக்கு சட்டப்போராட்டம் நடத்துவோம்'- புதுச்சேரி முதலமைச்சர்
author img

By

Published : Nov 9, 2020, 9:55 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பிற்கான உள் ஒதுக்கீட்டுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்து, அதற்கான கோப்பினை துணைநிலை ஆளுநருக்கு அனுப்பினார். இதனை உள் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இது குறித்து முடிவெடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில், அனைத்துக் கட்சிகளும் கலந்துகொண்டு கருத்துகளைத் தெரிவித்தனர்.

தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சிகளும், புதுச்சேரி அரசு எடுத்துள்ள இந்த உள் ஒதுக்கீட்டை ஆதரிக்கின்றன.

அதற்கான முழு ஆதரவை தருவதாக அனைத்துக் கட்சிகளும் தெரிவித்துள்ளன. 10 விழுக்காடு உள்ஒதுக்கீடு குறித்து பேச மத்திய உள் துறை அமைச்சரையும், உள் துறை செயலரையும் சந்திக்க நேரம் கேட்டு உள்ளோம். இதுகுறித்து சட்ட நடவடிக்கை எடுக்கவும் முடிவெடுத்துள்ளோம்.

மாணவர்களைப் பகைத்துக் கொண்டால் அது மிகப்பெரிய போராட்டமாக வெடிக்கும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க சட்ட வடிவமாக வடிவமைத்து துணைநிலை ஆளுநருக்கு அனுப்பிவைத்தோம்.

அதனையும் துணைநிலை ஆளுநர் டெல்லிக்கு அனுப்பிவைத்தார். அந்தச் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து உள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: உயர்நிலை மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு ஒதுக்கீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.