புதுச்சேரி: புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, "புதுச்சேரி மாநிலத்தில் 95 விழுக்காடு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி மாநிலம் வெகு விரைவில் சகஜ நிலைக்கு திரும்பும் என நம்புகிறேன்.
மேலும், வெளிமாநிலத்திற்கு பேருந்து விடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.
மருத்துவப் படிப்பில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்துள்ளது வரலாற்று துரோகம். ஜனநாயகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இழைக்கும் அநீதி. உச்ச நீதிமன்ற தீர்ப்பை வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளேன்.
கரோனா தொற்று பாதிப்பு குறைந்துவிட்டது என மெத்தனமாக இருக்கவேண்டாம். பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கவனத்துடன் இருக்கவேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: மருத்துவ உள் இட ஒதுக்கீடு பெற்றுத்தர முதலமைச்சர் தீவிர நடவடிக்கை: செங்கோட்டையன்