இன்று குருத்தோலை ஞாயிறையொட்டி தமிழ் நாட்டில் பல்வேறு மாவடங்களில் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிராத்தனைகள், திருப்பலிகளும் நடைப்பெற்றது.
இயேசு கிறிஸ்து மக்களுக்காக பட்ட துன்பங்களையும், உயிர் தியாகத்தை நினைவு கூறும் வகையில், கிறிஸ்தவ மக்கள் 40 நாட்களை தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். இந்த தவக்காலத்தின் இறுதி வாரம், அதாவது ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம், புனித வாரமாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர்.
புனித வாரத்தின் தொடக்க நாள் குருத்தோலை ஞாயிறாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முன், ஜெருசலேம் நகரின் வீதிகள் வழியாக அவரை ஒரு கழுதையின் மேல் அமர்த்தி ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
அப்போது வழிநெடுகிலும் மக்கள் குருத்தோலைகளை கையில் பிடித்து ஓசன்னா பாடல்களை பாடினர். அதன்படி, உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்தவர்களால் குருத்தோலை ஞாயிறு இன்று கொண்டாடப்படுகிறது.
அதன்படி புதுச்சேரியில் உள்ள புனித ஜென்மராக்கினி அன்னை பேராலயம், இருதய ஆண்டவர் பசிலிக்கா, நெல்லித்தோப்பு விண்ணேற்பு மாதா ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று காலை சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடைபெற்றது.
நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு குருத்தோலை ஏந்தி வந்தார்.