புதுச்சேரியில் மதுபானக் கடைகள் திறப்பது தொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் காணொலி மூலம் பேசிய அவர், சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக் கடைகள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், மொத்தம் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகள் காலை 9.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கலாம். பார்களுக்கு அனுமதியில்லை என்றார்.
இதனையடுத்து முதலமைச்சர் நாராயணசாமி மீண்டும் வெளியிட்ட காணொலியில், புதுச்சேரியில் மற்ற மாநிலங்களைப்போல் மதுபானங்களுக்கு கூடுதலாக கரோனா வரி விதிக்கப்பட்டு, மதுபானக் கடைகள் திறக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், இதற்கான கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்னும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். இதனால் மாநிலத்தில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்படாது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதுச்சேரியிலும் மதுக்கடைகள் திறப்பு!