புதுச்சேரி பொதுப்பணித் துறை தொழில்நுட்ப ஊழியர்கள் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் அறிவித்தனர். ஏற்கனவே இளநிலைப் பொறியாளர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று (ஜூன் 12) பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்குச் சங்கத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வீரசாமி, நிர்வாகிகள், ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தும் முகக்கவசம் அணிந்தும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பதவி உயர்வு, நிலுவைத்தொகை, அரசு விடுமுறை காலத்தோடு ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
அடுத்தக்கட்டமாக ஜூன் 17ஆம் தேதி தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் தொடர் போராட்டம் நடத்தப்போவதாகவும் முடிவுசெய்துள்ளனர்.