கர்நாடகாவில் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள மனகூலி அகாசி பகுதியில் மனநலம் பாதித்த இளைஞர் ஒருவர், சாலையில் நிர்வாணமாக சுற்றித் திரிந்துள்ளார். அவர், பப்ஜி கேமில் விளையாடுவது போல் சாலையில் வரும் வாகனங்களின் மீது கற்களை எறிவது, தூப்பாக்கியை கையில் வைத்திருப்பது, குதிப்பது, தாவுவது என்று பல்வேறு விநோத செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதை வைத்து , பப்ஜி கேம் மீதுள்ள மோகத்தால் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இளைஞரின் செயலை பார்த்து அதிர்ந்தனர். இருப்பினும் இளைஞர் குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்காததால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தனர். மேலும், அந்த இளைஞரை கட்டுப்படுத்த கை, கால்களை கயிறினால் காவல் துறையினர் கட்டினர்.
மேலும், ஊர் மக்கள் அந்த இளைஞரை கைது செய்து அழைத்துச் செல்லுமாறு காவல் துறையிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், இதற்கு காவல் துறையினர் மறுப்பு தெரிவித்ததால், இரு தரப்புக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: விளையாட்டில் கிடைத்த வெற்றி, உற்சாகத்தில் உயிரிழந்த சோகம்!