ETV Bharat / bharat

10 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி சி-49

author img

By

Published : Nov 7, 2020, 3:48 PM IST

Updated : Nov 7, 2020, 4:09 PM IST

ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலத்தில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி சி-49 ராக்கெட் மூலம் 10 செயற்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

pslv-rocket-launch-from-andhra
pslv-rocket-launch-from-andhra

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பாக தயாரிக்கப்பட்டுள்ள பி.எஸ்.எல்.வி சி-49 ராக்கெட் 10 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட் ஆந்திர மாநிலத்தில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து, 26 மணி நேர கவுன்டவுனை முடித்து இன்று 3.02 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இந்த ராக்கெட்டில் பூமியை கண்காணிப்பதற்காக இந்தியாவின் இ.ஓ.எஸ்.01 என்ற பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோளும் அனுப்பப்பட்டுள்ளது. அதனுடன் இணைந்து மற்ற நாடுகளின் 9 செயற்கைக்கோள்களும் பல்வேறு காரணங்களுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இந்த இ.ஓ.எஸ்.01 செயற்கைக்கோள் மூலம் புவிகண்காணிப்பு, விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் கண்காணிப்பு ஆகிய பணிகளைத் துல்லியமாக மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிதுவேனியா நாட்டிற்குச் சொந்தமான ஒரு செயற்கைக்கோளும், லக்சம்பெர்க்கிற்கு சொந்தமான நான்கு செயற்கைக்கோள்களும், அமெரிக்காவிற்குச் சொந்தமான நான்கு செயற்கைக்கோள்கள் என மொத்தம் ஒன்பது வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் வணிக ரீதியாக விண்ணில் செலுத்தப்படுகின்றன.

பி.எஸ்.எல்.வி சி-49
பி.எஸ்.எல்.வி சி-49

கரோனா வைரஸ் காரணங்களால் ராக்கெட் ஏவப்படுவது சில மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் பி.எஸ்.எல்.வி சி 49 ராக்கெட் ஏவப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 50,356 பேருக்கு கரோனா பாதிப்பு

Last Updated : Nov 7, 2020, 4:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.