இந்தியாவிலுள்ள நிலக்கரியை அகழ்ந்து எடுக்கவில்லையெனில், அது வீணாக மண்ணாகி விடும் என்று அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். தற்போது, நிலக்கரி சுரங்கத் தொழிலில் தனியாருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள டெஹிங் பட்காய் சரணாலயத்திலும் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான திட்டத்தை அரசு பரிந்துரை செய்துள்ளது.
இந்த சரணாலயத்தில் 293 வெவ்வேறு வகையான பறவைகள் பராமரிக்கப்படுகின்றன. முக்கியமாக இது பாதுகாக்கப்பட்ட யானைகளின் பகுதியாகும். இதன் பல்லுயிர்தன்மையை குலைக்கும் வண்ணம் அரசு விடுத்து இந்த அறிவிப்பை உல்பா அமைப்பு எதிர்த்துள்ளது.
இது குறித்து உல்பா அமைப்பின் செயலாளர் ரூபாக் அசோம் கூறுகையில், “நாங்கள் டெஹிங் பட்காய் சரணாலயத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை எதிர்க்கிறோம். இந்த அறிவிப்பு எங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. தனித்துவமான உயிர்களின் பல்லுயிர்த்தன்மை குறித்து எவ்வித புரிதலும் இந்திய அரசுக்கு இல்லையென நாங்கள் அறிவோம்.
அந்த சரணாலயத்திலிருக்கும் வளங்களைச் சுரண்ட அரசு முயற்சிக்கும் பட்சத்தில், அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் எங்கள் அமைப்பு இறங்க வேண்டியிருக்கும்” என்றார்.
இந்த சரணாலத்திற்கு ஆதரவாக மாணவர்கள் அமைப்பு #saveDehingPatkai என்னும் ஹேஷ்டேக் வழியாக இணைய போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்து மூதாட்டியின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்த இஸ்லாமியர்கள்!