இஸ்லாமிய மதத்திற்கு எதிராகவும் நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தும் வகையிலும் ஒரு காணொலி உருவாக்கப்பட்டு சமூக வலைதளத்தில் பரப்பப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இச்செயலைக் கண்டிக்கும்விதமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் டோடா, ரிச்சி மாவட்டங்களில் கடையடைப்புப் போராட்டத்தை நடத்த மத அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இதையடுத்து, அங்கு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.
கிஷ்த்வார் பகுதியில் பதற்றத்தைக் குறைக்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகமே ஊரடங்கு பிறப்பித்துள்ளது. ஸ்ரீநகர், புல்வாமா, குப்வாரா, புட்கம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். காணொலியைப் பதிவு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, காவல் துறையினர், சத்பால் சர்மா என்ற மதகுரு உள்பட மூவரை கைதுசெய்துள்ளனர். சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைவித்ததாகக் கூறி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சத்பால் சர்மாவின் உதவியாளர், அந்தக் காணொலியை எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பியது காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: சுட்டு வீழ்த்தப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா முக்கிய பயங்கரவாதி!