ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கடந்த மூன்றாம் தேதி ஈராக் தலைநகர் பாக்தாத்தில், அமெரிக்க விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். சுலைமானி படுகொலை செய்யப்பட்டதற்கு உலகம் முழுவதும் இருந்து அமெரிக்காவுக்கு எதிரான எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவுக்கு எதிராக ஷியா மதத் தலைவர் மௌலானா ஜவாத் தலைமையில், டெல்லியிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஊர்வலமாகச் சென்றனர்.
அப்போது அங்கு வந்த டெல்லி காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்காவுக்கு எதிராக பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: