உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் கடந்ச ஜூலை 3ஆம் தேதி காவல் துறையினருக்கும் ரவுடிகளுக்கும் நடைபெற்ற என்கவுன்டரில் எட்டுக் காவலர்கள் கொல்லப்பட்டனர்.
நாட்டை அதிரவைத்த இந்தச் சம்பவம் தொடர்பாக பிரபல நிழல் உலக தாதா விகாஷ் துபேவை உத்தரப் பிதேச காவல் துறையினர் கைதுசெய்தனர்.
மத்தியப் பிரதேசத்திலுள்ள ஒரு கோயிலில் பதுங்கியிருந்த விகாஷ் துபேவை காவல் துறையினர் கைதுசெய்தனர். அவரை உ.பி.க்கு அழைத்துச் செல்லும்போது, அவர் தப்பியோட முயன்றதால் காவலர்கள் விகாஷ் துபேவை என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.
கான்பூரில் எட்டு காவலர்கள் கொல்லப்பட்ட வழக்கில் விகாஷ் துபேவைத் தவிர அவரது சகோதரர்கள் ரஜினிகாந்த், அஜைகாந்த், ஷோபித் பாஜ்பாய் ஆகிய மூவரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
முன்னதாக கான்பூர் காவல் துறை மூத்த கண்காணிப்பாளர் (எஸ்.எஸ்.பி.) பிரீதிந்தர் சிங், மாவட்ட நிர்வாகத்திடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்திருந்தார். அதில், விகாஷ் துபே கணக்காளர் ஜெய்காந்த் பாஜ்பாய், அவரது மூன்று சகோதரர்கள் சட்டவிரோதமாகச் சொத்துகளை குவித்துள்ளனர் என்றும், அவர்களின் சொத்துகளை முடக்க உத்தரவிட வேண்டும் என்றும் மாவட்ட தலைமை நீதிபதியிடம் அறிக்கை தாக்கல்செய்திருந்தார்.
அதைத்தொடர்ந்து தற்போது அவர்கள் நான்கு பேரின் சொத்துகளை காவல் துறையினர் முடக்கியுள்ளனர். இருப்பினும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஷோபித் பாஜ்பாயின் மனைவி ஸ்வேதா, "இந்தச் சொத்து எதுவும் விகாஷ் துபே கொடுத்ததில்லை.
இவை அனைத்தையும் நாங்கள் கடினமாக உழைத்து வாங்கினோம். எந்தவித சரிபார்ப்பும் இல்லாமல் எங்கள் அனைத்து சொத்துகளையும் முடக்குவது நியாயமற்றது. நான் இப்போது எனது குழந்தைகளுடன் நடுத்தெருவில் இருக்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: தன்னம்பிக்கையால் போராடி விதியை வென்ற மனிதர்கள்!