உத்தரபிரதேச பாஜக கவுன்சிலரான விகாஸ் சர்மா சில நாட்களாகவே டெலாபிர் சாலையிலுள்ள சந்திப்பிற்கு விங் கமாண்டர் அபிநந்தனின் பெயரை வைக்குமாறு கோரிக்கை வைத்திருந்தார். இந்த கோரிக்கையின் பேரில் இந்திய முன்னாள் ராணுவ வீரர் நல சங்க அமைப்பானது பரேலி மாநகர ஆணையருக்கு இதுபற்றி ஒரு கடிதம் அனுப்பியது.
இதன்பேரில் மாநகராட்சி கூட்டத்தில் இக்கோரிக்கையானது ஏற்கப்பட்டு டெலாபிர் சாலை, அபிநந்தன் சவுக் என பெயரிடப்பட்டது. இப்பெயர் சூட்டப்பட்டது பரேலி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.