மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் தேசிய செயலாளரும் கிழக்கு உத்தர பிரதேசத்தின் தேர்தல் பொருப்பாளருமான பிரியங்கா காந்தி தன் தேர்தல் பிரச்சாரத்தை உத்தர பிரதேசத்தின் பிராயக்ராஜிலும், பிரதமா் மோடியின் தொகுதியான வாரனாசியிலும் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாா்ச் 18 ஆம் தேதி பிராயக்ராஜ் செல்லவிருப்பதாகவும், படகு சவாரி செய்து கங்கை நதிகரையில் உள்ள மக்களை சந்திக்கவிருப்பதாகவும், அதனை தொடா்ந்து மோடியின் தொகுதியான வாரனாசியில் உள்ள கோயில்களுக்கு செல்லவிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, பிராயக்ராஜ் செல்லவிருப்பதற்கு முன்பு லக்னோவில் உள்ள கட்சி தொண்டா்களை சந்தித்து தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிரியங்கா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட தலித் தலைவா் சந்திரசேகா் ஆசாத்தை நேற்று சந்தித்தது குறிப்பிடத்தக்கது.