கடந்த மூன்று நாட்களாக ட்விட்டரில் #SareeTwitter என்ற ஹாஸ்டேக்கில், சினிமா நடிகைகள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலதரப்பு பெண்களும் சேலை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, 22 ஆண்டுகளுக்கு முன்பு தனது திருமணத்தின் போது அணிந்திருந்த இளம் சிவப்பு பட்டு புடவை அணிந்த படத்தை பகிர்ந்தார். இதனால் நெட்டிசன்கள் பிரியங்கா காந்தி-ராபார்ட் வதேராவின் திருமண நாள் என்று நினைத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதனையடுத்து, தனக்கு தற்போது திருமண நாள் இல்லை. இருந்தாலும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்றும், ஆனால் ராபார்ட் வதேரா நீங்கள் டின்னருக்கு அழைத்து செல்லலாம் எனவும் பதிவிட்டிருந்தார்.