மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்குப்பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியிலும், பிரயாக்ராஜிலும் சென்ற வாரம் மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் பிரியங்கா காந்தி நாளை பரப்புரை தொடங்கவுள்ளார். மூன்று நாள் நடைபெறும் பரப்புரையானது காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலியில் முடிவடைகிறது.
பிரியங்கா காந்தி பைசாபாத், சுல்தான்புர், உன்னாவ் உள்ளிட்டமக்களவைத் தொகுதிகளில் பரப்புரையை முடித்துவிட்டு புகழ்பெற்ற அனுமன் காரி கோயிலில் வழிபாடு செய்ய உள்ளார்.
80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19 வரை ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.