உத்தரப் பிரதேசத்தில் சமீப காலங்களாக கள்ளச்சாராயம் காரணமாக தொடர் உயிரிழப்புகள் நிகழ்ந்துவருகிறது. முதலில் அம்மாநில தலைநகர் லக்னோவில் கள்ளச்சாராயம் குடித்து மக்கள் உயிரிழந்த நிலையில், அதைத்தொடர்ந்து மதுரா, பிரயாக்ராஜ் ஆகிய பகுதிகளிலும் உயிரிழப்புகள் தொடர்கின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டரில், "லக்னோ, ஃபிரோசாபாத், ஹப்பூர், மதுரா பிரயாக்ராஜ் உள்ளிட்ட உத்தரப் பிரதேசத்தின் பல முக்கிய நகரங்களில் கள்ளச்சாராயம் காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆக்ரா, பாக்பத், மீரட் ஆகிய பகுதிகளிலும் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
‘கள்ளச்சாராய மாஃபியாவுக்கு எதிராக யோகி அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? இதற்கெல்லாம் யார் பொறுப்பேற்க போகிறார்கள்" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: 2024இல் இந்தியர்கள் அனைவரும் கோவிட்-19 தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு!