உத்தரப் பிரதேசத்தில் அதீத மழைப்பொழிவு காரணமாக பயிர்கள் நாசமாகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தினார்.
இது குறித்து அவர் ட்விட்டரில், “விவசாயிகளின் பிரச்னைக்கும் செவிசாயுங்கள். உத்தரப் பிரதேசத்தில் சில இடங்களில் பெய்த அதீத மழைப்பொழிவு காரணமாக, விவசாயிகள் 80 விழுக்காடு இழப்பைச் சந்தித்துள்ளனர். அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசம், அண்டை மாநிலங்களில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தத் தகவலில், “பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்” எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இது ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல - எச்சரிக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள்!