உத்தரப் பிரதேச அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கான்பூர் குழந்தைகள் காப்பகத்தில் இரண்டு சிறுமிகள் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியானது.
கரோனா பரிசோதனை நடந்தபோது அந்தக் குழந்தைகள் கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக யோகி அரசுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கான்பூரில் உள்ள அரசு விடுதியில் இரண்டு பெண்கள் கர்ப்பிணியாக இருப்பதும், அதில் ஒருவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
அங்குள்ள அரசு குழந்தை தங்குமிடத்தில் 57 சிறுமிகள் கரோனா வைரஸுக்கு பரிசோதிக்கப்பட்டதை அடுத்து ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆனால் தற்போது விசாரணை என்ற பெயரில் அனைத்தும் அடக்கப்படுகிறது. இது மனிதாபிமானமற்ற செயல்” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அய்யா என் வீட்ட காணோம்… கண்டுப்பிடிச்சி கொடுங்க…