ETV Bharat / bharat

தனியார்மயமாகும் மின் துறை: உள்ளிருப்புப் போராட்டத்தில் தொழிலாளர்கள் - Power sector workers struggle

புதுச்சேரி: மின் துறையைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையைக் கண்டித்து இன்று (ஜன. 11) மின் துறை தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.

தனியார்மயமாகும் மின்துறை
தனியார்மயமாகும் மின்துறை
author img

By

Published : Jan 11, 2021, 1:44 PM IST

புதுச்சேரி மின் துறை தொழிலாளர்கள், மின் துறை தனியார்மயமாக மாற்றக் கூடாது என கடந்த ஆண்டு மே மாதம் முதல் போராட்டங்கள் நடத்திவருகின்றன. இது குறித்து முதலமைச்சர், அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் மின் துறை தனியார்மயமாக மாற்றக் கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த நவம்பர் 23ஆம் தேதி புதுச்சேரியில் மின் துறையைத் தனியார்மயமாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே இதைக் கண்டித்து மின் துறை தலைமை அலுவலகத்தில் இன்று (ஜன. 11) காலை முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவுசெய்யப்பட்டது.

அதனைதொடர்ந்து, புதுச்சேரி திப்ராயபேட்டை தலைமை மின்துறை அலுவலகத்தில் துறை ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இதனால் மின்கட்டணம் செலுத்தும் அலுவலகம் மூடப்பட்டது.

அங்கு பணிக்குச் செல்லாமல் புறக்கணித்து அலுவலகம் வெளியே நின்றுகொண்டிருந்தனர். அரசு அலுவலகம் அருகே போராட்டம் நடத்த 144 தடைவிதிக்கப்பட்டுள்ளதால் காவல் துறையினரால் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தேனியில் டிஎன்டி சான்றிதழ் வழங்கக்கோரி சாலை மறியல்: தள்ளுமுள்ளில் ஒருவருக்கு கை முறிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.