கரோனா தொற்று புதுச்சேரியில் மேலும் பரவாமல் இருப்பதற்காக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதுச்சேரி அரசு ஏற்பாடு செய்தது.
இதனை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு மருத்துவ கல்லூரிக்கும் ஒரு மருத்துவர் என்ற அடிப்படையில் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மருத்துவக் குழுவானது வாரந்தோறும் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், இன்று இக்குழு கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் இன்று நடைபெற்றது.
முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கடந்த வாரம் தனியார் மருத்துவமனை கல்லூரிகளின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை மருத்துவ குழுவினர் இன்று சமர்ப்பித்தனர்.
இக்கூட்டத்தில் வளர்ச்சித்துறை ஆணையர் அன்பரசு, சுகாதாரத்துறை செயலாளர் அருண், மருத்துவ அலுவலர்கள் கலந்துகொண்டனர்.