மேற்கு வங்க மாநிலத்தின் பேருந்து கூட்டமைப்பு சங்க பொதுச் செயலாளர் தபன் பானர்ஜி இதுகுறித்து கூறுகையில், தனியார் பேருந்துகள் சங்கத்தில் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேருந்துகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புடன் தொடர்புடைய ஒவ்வொரு பேருந்திலும் இரண்டு இடங்கள் "திரிதாரா" என்ற பெயரில் குறிக்கப்பட்டு மூன்றாம் பாலினத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை அவர்களை அங்கீகரிப்பதற்காகவும், அவர்களை சமமாகக் கருதுவது தொடர்பாக பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உதவும்.
நகரப் பேருந்துகள் பலவற்றில் இந்த நடைமுறை தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. இவை தற்போது அனைத்து பேருந்துகளிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இது அனைத்து பயணிகளும், ஓட்டுநர், நடத்துநர்களும் மூன்றாம் பாலினத்தவர்களை மரியாதையுடன் நடத்த வழிவகுக்கும் என்றார்.