மகாராஷ்டிரா மாநிலத்தின் முதன்மைச் செயலாளருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்துவருகின்றனர்.
மேலும் அவரை தொடர்புகொண்ட அலுவலர்கள், செயலாளர்கள், இணை செயலாளர்கள், துணை செயலாளர்கள் ஆகியோரையும் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கரோனா வைரஸூக்கு 14 ஆயிரத்து 541 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு 583 ஆக உள்ளது. ஒருவர் கூட மீட்கப்படவில்லை. நாடு முழுக்க கரோனா வைரஸ் பாதிப்பாளர்கள் 53 ஆயிரத்து 45 பேர் உள்ளனர். சிகிச்சைக்கு பின்னர் 15 ஆயிரத்து 331 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு 1,787 ஆக உள்ளது.
இதையும் படிங்க: 'வைரஸை எதிர்கொள்ள எதிர்ப்பு சக்தி உருவாக்குவதில் திருப்புமுனை'- இஸ்ரேல் தூதர் தகவல்!