பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தலைவர்களும் தங்கள் பேச்சுகளில், கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் இலக்கியங்களை, குறிப்பாக திருக்குறளை மேற்கொள்காட்டி காட்டி பேசிவருகின்றனர்.
சமீபத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் சுமார் 30 விழுக்காடு பகுதிகளை நீக்க மத்திய இடைநிலை கல்வி வாரியம் முடிவு செய்திருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருந்தார்.
ஒன்பதாம் வகுப்பில் நீக்கப்பட்ட பாடத்தில் திருக்குறளும் உள்ளதாக குற்றச்சாட்டுகள் பரவின. இதற்கு, தமிழ்நாடு அரசியல் கட்சிகள் கடும் கண்டங்களை பதிவு செய்தன.
இந்தச் சூழலில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் திருக்குறளை குறிப்பிட்டு ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும்.
-
தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன்.
— Narendra Modi (@narendramodi) July 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன்.
— Narendra Modi (@narendramodi) July 16, 2020தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன்.
— Narendra Modi (@narendramodi) July 16, 2020
தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:15 மணி நேரம் நடந்த 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை: படைகளை விலக்கிக்கொள்ளும் இந்தியா!