நாடெங்கிலும் கொரோனா வைரஸ் குறித்தான அச்சுறுத்தல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் சுகாதார ஆராய்ச்சி துறையும் (Department of Health Research), சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகமும் (Ministry of Health and Family Welfare) அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில் கொரோனா வைரஸின் பாதிப்பு இருப்பதாக சந்தேகத்திற்கு இடமான 3828 நபர்களின் மாதிரிகளை சோதனை செய்ததாக குறிப்பிட்டது. அதில் 45 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் ஒருவருக்கும், புனேவில் இருவருக்கும், பெங்களூருவில் மூவருக்கும் இருப்பதாகத் தெரிவித்தது.

இதையும் படிங்க... கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் 2 வயது குழந்தை!