லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர். சீன தரப்பிலும் உயிரிழப்பு நிகழ்ந்ததாக அந்நாடு தகவல் வெளியிட்டுள்ளது. இச்சம்பவம் இரு நாடுகளுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது இரங்கலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "நம் நாட்டின் இறையாண்மையும், ஒருமைப்பாட்டையும் பாதுக்காக்க உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குகிறேன். கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணம் அடைந்த அனைவரும் நம் நாட்டின் மரபு, ராணுவ வலிமைகளை உறுதிப்படுத்தியுள்ளனர்" எனக் குறிப்பிட்டிருந்தார்.