டெல்லி உச்ச நீதிமன்றக் கூடுதல் கட்டடத்தில் நடைபெற்ற சர்வதேச நீதித் துறை மாநாட்டில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 'நீதித் துறை மற்றும் மாறும் உலகம்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அதில் அவர் பேசுகையில், உச்ச நீதிமன்றம் நாட்டின் வளர்ச்சிக்காகவும் சமூக மாற்றத்திற்காகவும் தன்னிலை மாறாமல் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது என்றார்.
அதன் ஒருபகுதியாக இரண்டு தசாப்தத்திற்கு முன்பே பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்புக் கருதி விசாகா குழு அமைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டவர், சமூகத்தில் பாலினம் வேறுபாடின்றி அதனை நிலைநாட்டுவதில் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் வளர்ச்சிப் பாதையில் செயல்பட்டுவருவதாகவும் தெரிவித்தார். மேலும் முன்மாதிரியாக உச்ச நீதிமன்றம் இதில் செயல்திறனுடனும் நேசத்திற்குரிய இலக்குடனும் செயல்படுகிறது என்றார்.
மேலும் இந்திய ராணுவத்தில் பெண்களுக்கும் சம உரிமை வழங்குதல் உள்ளிட்ட சமூக சீர்த்திருத்த வளர்ச்சிக்காகவும் உச்ச நீதிமன்றம் செயல்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் உரைக்கு பிரதமர் நன்றி