டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. 70 இடங்களில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில், பிப்ரவரி 16ஆம் தேதி டெல்லியின் முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்கவுள்ளார். இதற்காக ராம்லீலா மைதானம் தயார் செய்யப்பட்டுவருகிறது. இதில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
இருந்தபோதிலும், இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எந்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுவருகிறது.
தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால் போல் வேடமிட்ட சுட்டிக் குழந்தையின் புகைப்படம் டவிட்டரில் ட்ரெண்டானது. பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அக்குழுந்தைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புல்வாமா தாக்குதல் முதலாம் ஆண்டு நினைவு நாள் - ராகுல் காந்தி எழுப்பும் முக்கியமான கேள்விகள்!