உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் தீபாவளி பண்டிகையின் முக்கிய நிகழ்வான சரயு ஆற்றங்கரையில் லட்சத்திற்கும் அதிகமான வண்ண விளக்குகளாலும் அகல் விளக்குகளாலும் ஜொலிக்கும் ’தீபோட்சவ்’ நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது.
தற்போது இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. ’தீபோட்சவ்’ நிகழ்ச்சியில் அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற ’தீபோட்சவ்’ நிகழ்வில் மூன்று லட்சத்து 51 ஆயிரம் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனையும் படைத்தது. இந்த ஆண்டு ஐந்து லட்சத்து 51 ஆயிரம் விளக்குகள் ஏற்றப்படவுள்ளதால் சென்ற ஆண்டின் சாதனை முடியடிக்கப்படும் என்று விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சரயு ஆற்றங்கரை வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்ற இந்த அரிய நிகழ்வைக் காண உள்ளூர், வெளியூர் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் என ஏராளமான பொதுமக்கள் கலந்துகொள்வார்கள் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: மின் விளக்குகளால் ஒளிரும் பொற்கோயில்!